தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: பாம்பனில் முதலாம் எண் புயல் கூண்டு ஏற்றம்! - Ramanathapuram latest news

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பாம்பனில் முதலாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக்கடலில் குறைந்த காற்றுழுத்த தாழ்வு
வங்கக்கடலில் குறைந்த காற்றுழுத்த தாழ்வு

By

Published : Sep 13, 2021, 12:55 PM IST

வங்கக்கடலில் வடமேற்கு திசையை ஒட்டிய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஒடிசாவின் கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளை ஒட்டிய 70 கிலோ மீட்டர் தொலைவிலும் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வடக்கு, வட கிழக்கில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதனால், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதலே (செப். 12) பலத்த சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

மேலும், தனுஷ்கோடி பகுதியில் சூறைக்காற்றுடன் மணல் புயல் அடித்து வந்தது. இதையடுத்து இன்று (செப்.13) பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக அலுவலர்கள் ஏற்றினர்.

இதையும் படிங்க:நீட் தேர்வு - தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்

ABOUT THE AUTHOR

...view details