பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நூதன ஆர்ப்பாட்டம் - Diesel, Petrol prices hike
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரு சக்கர வாகனத்திற்கு மலர் வளையம் வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நுாதன போராட்டம்
இரு சக்கர வாகனத்திற்கு மலர்வளையம் வைத்து நூதன முறையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் ஏ. அசோக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலைஉயர்வைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
Last Updated : Jun 17, 2021, 4:03 PM IST