தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு! - ராமநாதபுரம் அண்மைச் செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, இன்று ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு!
ராமநாதபுரத்தில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு!

By

Published : Aug 21, 2021, 11:06 PM IST

ராமநாதபுரம்: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நேற்று (ஆக.20) தனது குடும்பத்தினருடன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், இன்று (ஆக.21) தலமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு, அவர் ஆலோசனைகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளையும் அவர் நட்டார். ஆய்வின் போது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் பரமக்குடி, முதுகுளத்தூர் நீதிமன்றங்களிலும், தலைமை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரம்: தலைமை வழக்கறிஞருக்கு கடிதம் எழுதிய திருமா எம்பி

ABOUT THE AUTHOR

...view details