ராமநாதபுரம்:நம்புதாளை பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் 2019ஆம் ஆண்டு ஓமன் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமாகினர். அதில் கார்மேகம், இராமநாதன் என்ற இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற இருவரின் உடல்கள் மீட்கப்படாததால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
இது குறித்து கணவனை இழந்த பெண் கூறுகையில்,
“மீனவர் நலவாரியத்திலிருந்து நான்கு குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே உதவித் தொகை கிடைக்கப்பெற்றது. இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்படாததால் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிக்கின்றது.