தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போலிஸ் என்ற வார்த்தையை நீக்குங்க..!' - வழக்கறிஞர் எஸ்பியிடம் மனு - english word

ராமநாதபுரம்: "தமிழ்நாடு காவல் துறை அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் எழுத்தப்பட்டுள்ள போலிஸ் என்ற ஆங்கில வார்தையை நீக்கி காவல் என தமிழில் காவல் என்று மாற்ற வேண்டும்" என்று, வழக்கறிஞர் திருமுருகன், மாவட்டம் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

போலிஸ் என்ற ஆங்கில வார்தையை மாற்ற வேண்டும்

By

Published : Jul 2, 2019, 5:08 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.ஆர். சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். வழக்கறிஞரான இவர் இன்று ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அம்மனுவில், "காவல்துறை அலுவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் போலிஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி காவல் என தமிழில் எழுத வேண்டும்.1956, 1957 ஆண்டுகளில் தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டத்தின் படி அரசு அலுவலகங்கள் முழுவதும் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற ஆணை உள்ளது.

போலிஸ் என்ற ஆங்கில வார்தையை மாற்ற வேண்டும்

அனால், இது நடைமுறையில் இல்லை. எனவே இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் மூன்று மாதத்திற்குள் தமிழில் மாற்ற நடவடிக்கைகள் வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ABOUT THE AUTHOR

...view details