தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடற்கரையில் கரை ஒதுங்கிய முதியவரின் சடலம் - Ramanathapuram District news

பாசிப்பட்டணம் கடற்கரையில் கரை ஒதுங்கிய முதியவரின் உடலைக் காவல் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்கரையில் கரை ஒதுங்கிய முதியவரின் சடலம்
கடற்கரையில் கரை ஒதுங்கிய முதியவரின் சடலம்

By

Published : Jun 23, 2021, 6:46 PM IST

ராமநாதபுரம்: திருவாடானை தாலுகா வட்டானம் அருகே நல்கிராம வயல் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்ற முதியவர். இவர் நேற்று முன்தினம் (ஜூன் 21) காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று (ஜூன் 22) காலை பாசிப்பட்டணம் காலனி கடற்கரை பகுதியில் சென்ற சிலர் பார்க்கையில் தலைகுப்புற ஒரு முதியவரின் உடல் கரை ஒதுங்கியது தெரியவந்தது. அவரை யார் என்று பார்த்தபோது அவர் வட்டானம் அருகே நல்கிராமவயல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (60) என்ற முதியவர் என்பது தெரியவந்ததுடன் கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்துவந்த கடலோர காவல் படையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details