இந்தியாவில் ராஜஸ்தான், ஹிமாச்சல்பிரதேசம், குஜராத் போன்ற பல மாநிலங்களில் தொழிலாளர்கள் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்துள்ளன, மாநில அரசுகள்.
அதேபோல் தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 59ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனை அந்தந்த மாநில அரசுகள் வாபஸ் வாங்க வலியுறுத்தி, ராமநாதபுரம் சிஐடியு சார்பாக இன்று அண்ணா நகரில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.