தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 500க்கும் மேற்பட்ட காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் - காய்ச்சல் கண்டறியும் முகாம்

ராமநாதபுரம்: இதுவரை மொத்தம் 521 காய்ச்சல் கண்டறியும் முகாம்களில், 16 ஆயிரத்து 400 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

521 Flu Diagnosis Camp
காய்ச்சல் கண்டறியும் முகாம்

By

Published : Jun 1, 2021, 5:36 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 521 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 16 ஆயிரத்து 400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் பொற்கொடி கூறியதாவது, "கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கரோனா நோய் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்களைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் 10 நாள்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் இந்த முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை 521 முகாம்கள் நடத்தப்பட்டு 16 ஆயிரத்து 400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 222 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் நாள்களில் காய்ச்சல் முகாம்களை இன்னும் அதிகப்படுத்தவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details