ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அடுத்த ஆதங்கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்திர பாண்டியன். இவர் திருஉத்திரகோசமங்கையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக மின் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
ராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு! - ramanathapuram
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே தற்காலிக மின் வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்வாரிய ஊழியர்
இந்நிலையில், தேரிருவேலி கிராமத்திலுள்ள ஜெயராம கிருஷ்ணன் என்பவரின் விவசாய நிலம் அருகே மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடல் உடற்கூராய்வுக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தேரிருவேலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.