மக்களவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களை சந்தித்துவருகிறார்.
ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த தெலங்கானா முதலமைச்சர்! - Telungana CM
ராமநாதபுரம்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இராமேஸ்வரம்
இந்நிலையில், நேற்று மாலை கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரம் வந்த சந்திரசேகர் ராவ், பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர் இன்று காலை ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இதனையொட்டி கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தனுஷ்கோடி சென்று பார்வையிட்ட பின்னர், மதுரை செல்ல உள்ளார்.