தமிழ்நாட்டில், மே 7 முதல் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. அதில், மதுபானக் கடைகளில் வாங்க வருவோர் ஒவ்வோருக்கும் இடையே ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.
ராமநாதபுரத்தில் மதுக்கடைகள் திறக்கும் பணிகள் தீவிரம் - Wines Shop Open
ராமநாதபுரம்: மதுபானக் கடைகளுக்கு மதுபானம் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Wines Shop Open
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 121 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 26 மதுபானக்கடைகள் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளதால் அவை திறக்கப்படாது. மீதமுள்ள 94 கடைகளுக்கு மதுபானங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:அரகண்டநல்லூரில் கள்ளச்சாரயம் காய்ச்சியவர்கள் கைது!