தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய தடை! - ramanadhapuram latest news

ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இன்று(ஆக்.1) முதல் மூன்று நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

tample-worship-ban-in-rameshvaram
tample-worship-ban-in-rameshvaram

By

Published : Aug 1, 2021, 12:32 PM IST

ராமநாதபுரம் : தமிழ்நாடு அரசு கூடுதல் தளர்வின்றி ஊரடங்கு ஒருவாரத்திற்கு நீட்டித்துள்ளது. ஆடி மாதம் என்பதால் ஆடி பெருக்கு உள்ளிட்ட முக்கிய நாள்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் ஆக்ஸ்ட் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சுவாமி தரிசனம் செய்ய இன்று வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் இன்று காலை ராமநாதசுவாமி கோயில் வாசலில் நின்றவாறு சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

தரிசனம் செய்ய தடை

மேலும் பக்தர்கள் அனைவரும் முகக் கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பாக வலியுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை - அதிகரிக்கும் மரணங்கள்

ABOUT THE AUTHOR

...view details