தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்துவட்டி தொல்லை: தமிழ் ஆசிரியர் தற்கொலை! - காவல்துறை விசாரணை

ராமநாதபுரம்: பாம்பன் அருகே கந்துவட்டி தொல்லை காரணமாக அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tamil-teacher-commits-suicide-by-hanging-near-pamban
tamil-teacher-commits-suicide-by-hanging-near-pamban

By

Published : Dec 16, 2020, 7:58 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அக்காள்மடம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாரியப்பன். இவர் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் அக்காள்மடம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டின் அறை பூட்டப்பட்டிருந்ததை அவரது மகன் சதீஷ் பார்த்துள்ளார். அதன்பின் கதவை திறந்து பார்த்தபோது பூமாரியப்பன் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பன் காவல் துறையினர், பூமாரியப்பனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில், கந்துவட்டி கடன் பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பூமாரியப்பன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

ABOUT THE AUTHOR

...view details