ராமநாதபுரம்: பரமக்குடி அருகே உள்ள தோளூர் தெற்குபட்டியைச் சேர்ந்த கணேஷ்பிரபு, சிலம்பரசன், மணிகண்டன், கமுதி வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஆகிய நான்கு கபடி வீரர்கள், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான கபடிப் போட்டியில், தமிழ்நாட்டு அணிக்காகக் கலந்துகொண்டு தங்கம் வென்று, சர்வதேச உலகப் போட்டிக்கும் தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தில் வருகின்ற அக்டோபர் 1 முதல் 4ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற சர்வதேச உலகப் போட்டிக்குச் செல்ல நிதி உதவி கேட்ட நிலையில், ராமநாதபுரம் சட்டபேரவை உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வீரர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.