தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! - தமிழ்நாடு மின்சார ஒப்பந்த பணியாளர்கள்

ராமநாதபுரம்: தினக்கூலியாக 380 ரூபாய் வழங்க கோரி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Aug 24, 2020, 3:16 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்பகிர்மானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலகங்களில் 226 பேர் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களுடைய தினக்கூலியை ரூபாய் 380 வழங்க வேண்டும் என்றும் புதிதாக கொண்டுவந்த கேங்மேன் பதவியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேலும் கூறுகையில், “பணியாளர் பற்றாக்குறையிலும் மின் தடை காலங்கள் மற்றும் புயல் மற்றும் பேரிடர் காலங்களிலும் ஒப்பந்த பணியாளர்கள் தான் இரவு பகல் பாராமல் பணியற்றினோம்.
ஆனால் எங்கள் நீண்டநாள் கோரிக்கையான 380 தினக்கூலி இதுநாள் வரை வழங்கப்படவில்லை. பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை.
தற்போது நியமனம் செய்யப்படும் கேங்மேன் பதவியில் வயது மூப்பின் காரணமாக எங்களால் கலந்துகொள்ள இயலவில்லை.
இதுவரை பல விபத்துகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில்லை. எங்களை புறம் தள்ளி வெளியாட்களை பணியில் அமர்த்தி 18 ஆயிரத்து 800 ரூபாய் ஊதியம் அறிவித்திருக்கிறது.
ஆனால் நாங்கள் கேட்பதோ 9 ஆயிரத்து 120 ரூபாய் மட்டுமே என்பதால் எங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என்றனர்.

அதன்பின்னர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத் தலைவர் செந்தில் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details