ராமநாதபுரம் குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன்பாக சிஐடியு ராமநாதபுரம், சிவகங்கை குடிநீர் வாரிய ராமநாதபுரம் தொழிற்சங்கம் சார்பாக மாவட்டம் முழுவதும் உள்ள பம்புசெட் ஆபரேட்டர்களுக்கு வழங்கப்படுகின்ற 15,600 ரூபாய் சம்பளப் பணத்தை ஒப்பந்ததாரர்கள் பொறியாளர்களும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு ஒரு ஒப்பந்த ஊழியருக்கு 4,900 ரூபாய் மட்டுமே வழங்கினார்.
சம்பளம் வழங்கக் கோரி தமிழ்நாடு குடிநீர் வாரிய தொழிற்சங்கத்தினர் போராட்டம் - Drinking Water Drainage Board Office of the Executive Engineer
ராமநாதபுரம்: குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகம் முன்பாக சம்பளம் வழங்கக் கோரி தமிழ்நாடு குடிநீர் வாரிய ராமநாதபுர தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளம் வழங்கக் கோரி தமிழ்நாடு குடிநீர் வாரிய தொழிற்சங்கத்தினர் போராட்டம்
மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியரிடம் முறையிட்டும் தீர்வில்லை எனவும், கடந்த 9 ஆண்டுகளில் 31 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக கூறியும் தற்பொழுது 8,000 ரூபாய் வரை சம்பளமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 30-க்கும் மேற்பட்ட பம்ப் செட் ஆபரேட்டர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED:
protest pump set operaters