ராமநாதபுரம்:பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதோடு உடனிருந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உதயநிதி ஸ்டாலின், பெரிய கருப்பன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், சக்கரபாணி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகிய 11 அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கப் பள்ளி மாணவ மாணவிகளை வரவேற்பு பதாகை மற்றும் கொடிகளைக் கொடுத்து திமுகவினர் நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழாவும் 61வது குருபூஜை விழாவும் அக்கிராமத்தில் உள்ள தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.