ராமநாதபுரம்: பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகிறார்.
காலை 9 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்கின்றனர். அவர்களை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லுார் ராஜூ உள்ளிட்டோர் குருபூஜையில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விரைந்து உள்ளார். காலை 7.15 மணி முதல் மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து மதுரை, மானகிரி ஆவின் சந்திப்பு 2வது நுழைவு வாயில் அருகில் புதிதாக கட்டப்படவுள்ள கோரிப்பாளையம் சந்திப்பு மேம்பாலம் மற்றும் மதுரை - தொண்டி சாலையில், சாலை மேம்பால கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.