தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஏஐடியுசி சார்பில் முற்றுகைப் போராட்டம் - Ramanathapuram district news

ராமநாதபுரம்: மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல அலுவலகம் முன்பு கரோனா நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஏஐடியுசி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஏஐடியுசி சார்பில் முற்றுகைப் போராட்டம்
தமிழ்நாடு ஏஐடியுசி சார்பில் முற்றுகைப் போராட்டம்

By

Published : Oct 7, 2020, 12:49 PM IST

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 31 லட்சம் உடல்சார் தொழிலாளர்கள் அரசின் சலுகைக்காக பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு கரோனா ஊரடங்கு நிவாரணம் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

உடனே அதற்கான ஆன்லைன் பதிவை 12 லட்சம் பேர் செய்ததையடுத்து, அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 19 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை.

எனவே இவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படாது என அதன் தொழிலாளர் நல வாரிய அலுவலர்கள் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் ஆன்லைன் முறையில் பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும், அல்லது அதனை எளிமையாக்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details