தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்! - ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

ராமநாதபுரம்: கல்பாக்கம் அணுமின் நிலையம் நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!
ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

By

Published : May 5, 2021, 9:43 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

மாவட்டத்தில் தற்போது ஆயிரத்து227 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 7 ஈசிஜி இயந்திரம், 27 நெபுலைஷர்கருவி, 3 ஜெனரேட்டர்கள், 30 தெர்மோமீட்டர்கள் உள்ளிட்ட நவீன மருத்துவ உபகரணங்கள், ஊயிர்காக்கும் கருவிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன .

மருத்துவ உபகரணங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் , அனைத்து கருவிகளையும் உரிய முறையில் மக்கள் நலனுக்கு முழுமையாக பயன்படுத்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார் .

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details