இராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தில் இருந்து இன்று (ஏப்.9) காலை நடுக்கடல் பகுதியில் ஒருவர் தற்கொலை செய்வதற்காக குதித்துள்ளார். இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் பெங்களூருவைச் சேர்ந்த தாமோதர் என்பதும், கடன் பிரச்சினை காரணமாகவே பாலத்திலிருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அங்கு அவருக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.