ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் அறிவுரையின்படி, மாவட்டத்தின் மண்டபம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று (மே.19) சிவகங்கை மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் மாடசாமி சுந்தர்ராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மண்டபம் பேரூராட்சி பகுதியில் உள்ள புதிய பாம்பன் பாலம் கட்டும் ’ரஞ்சித் பில்டிங்’ நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தங்கும் முகாமில் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த முகாம் தனிமைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.