தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 1, 2019, 11:40 AM IST

ETV Bharat / state

‘தேர்ச்சி விகிதத்தின் ரகசியத்தை வெளியிட்ட ராமநாதபுரம் ஆட்சியர்!’

ராமநாதபுரம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு விஷயங்களிலும் ஈடுபட ஆசிரியர்கள் அனுமதி அளித்த காரணத்தால் தான், மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்

ராமநாதபுரம் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் அரசு பள்ளிகள் மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, "ராமநாதபுரம் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்டு 98.48 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்று மாநில அளவில் 2வது இடத்தையும், அரசு பள்ளிகளை பொறுத்தவரை 98.26 சதவீத பெற்று முதலிடத்தைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கும், நன்றாக செயல்பட்ட மாணவர்களுக்கும் வாழ்த்துகள். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தவிர மற்ற விளையாட்டு போன்ற விஷயங்களிலும் ஈடுபட ஆசிரியர் அனுமதி அளித்ததன் காரணமாகவே தேர்வு முடிவுகள் இவ்வளவு அதிக அளவில் இருக்கிறது.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான வசதிகளை உறுதி செய்வோம்" என்றார்.

அதேபோல், நம்மிடம் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், "ஆசிரியர்களின் பணி என்பது மிகவும் பெரியது, பகல் இரவு பாராது மாணவர்கள் நலன் கருதி பணியைச் செய்தது இந்த வெற்றிக்கு காரணம். பெற்றோர்களுக்கும் இந்த வெற்றியில் ஒரு மிக முக்கிய பங்கு உண்டு.

அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருக்கிறோம், ஓர் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றக்கூடிய நடவடிக்கையில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பிரேமின் பிரத்யேக பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details