ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கிராம மக்கள் மத்தியில் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மாணவர் சேவை மையத்தின் சார்பில் கரோனா குறித்த ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர் சேவை மையம் - சுவர் ஓவியங்கள்
ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர் சேவை மையத்தினர் சுவர் ஓவியங்களை வரைந்துவருகின்றனர்.
student service association draw corona awareness painting in ramnad
இந்த நிலையில், முதுகுளத்தூர் பகுதியில் உள்ள காந்தி சிலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கரோனா தொற்று குறித்த ஓவியங்களை வரைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். அந்த ஓவியத்தில், "சிறிய துணியால் முகத்தை மூடு இல்லையென்றால் பெரிய துணியால் உடலை மூட நேரிடும்" உள்ளிட்ட வாசகங்களை எழுதியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.