தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோட்டார் போட சொன்ன ஆசிரியர்; தூக்கி வீசப்பட்ட அப்பாவி மாணவன் உயிரிழப்பு! - ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன், மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரழந்தார்.

ஆசிரியர் கைது செய்யப்பட்டார்

By

Published : Sep 5, 2019, 11:11 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தவர், கார்த்தீஸ்வரன். பள்ளியில் உள்ள மின் மோட்டாரின் சுவிட்சை போட சொல்லி இவரிடம் ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார். இதனையடுத்து, மோட்டார் ஸ்விட்சில் கைவைத்தபோது, மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே மாணவன் கார்த்தீஸ்வரன் பரிதாபமாக உயிரழந்தார்.

உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

இந்த தகவலறிந்து பள்ளிக்கு ஓடிவந்த மாணவரின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் என அனைவரும் மாணவன் உயிரிழப்பிற்கு ஆசிரியர் தான் காரணம் என அவரைத் தாக்க முயன்றனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கிராம மக்களை சமாதானம் செய்துவிட்டு ஆசிரியரை பாதுகாத்தனர்.

மேலும், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். இந்நிலையில், மாணவரை மின் மோட்டார் இயக்கக் கூறிய ஆசிரியர்கள் தமிழரசு, அபிலாஷா ஆகியோரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் பணியிடை நீக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து மாணவரின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள், கிராமத்தில் தகனம் செய்தனர்.

மேலும், கல்வித் துறை சார்பாக மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் கல்வித்துறை இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details