மத்திய அரசின் விவசாயிகள் திருத்தச்சட்டம், தொழிலாளர்கள் திருத்தச்சட்டம், நீட்தேர்வு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகபூபதியின் தலைமையில் போராட்டக்காரர்கள் அரண்மனை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.