ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இம்மாவட்டத்தில் சமூகநல அலுவலர், சைல்டு லைன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தை நலக்குழு ஆகியோர் ஒருங்கிணைந்து 'குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006' இன்கீழ் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த மாதத்தில் மட்டும் பரமக்குடி, நயினார் கோவில், கமுதி, கீழக்கரை, திருப்புல்லாணி ஆகிய வட்டாரங்களிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பொது காவல் நிலையங்களில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக மொத்தம் ஆறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்படும் நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கிடச் சட்டத்தின் மூலம் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.