ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டி, திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த ஒருவார காலமாக மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் வங்கக் கடலில் ஒடிசாவின் கோலாப்பூரிலிருந்து 670 கி.மீ கிழக்கு தெற்காகவும், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டிணத்திலிருந்து 740 கி.மீ கிழக்காகவும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.