தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி - ramanathapuram

ராமநாதபுரத்தில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர்.

ராமநாதபுரத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
ராமநாதபுரத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி

By

Published : Aug 17, 2021, 7:32 AM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இளைஞர்களுக்கு இடையே மாநில அளவிலான வாலிபால் போட்டி இன்று (ஆக.16) நடைபெற்றது. இந்தப் போட்டியில் தூத்துக்குடி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.

இரவு பகலாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அணியின் வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை செல்லியம்மன் கோயில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

ராமநாதபுரத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி

வெற்றி பெற்ற அணிக்கு பரிசு

இதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. திருச்சி லால்குடி அணியினர் வென்று முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் பெற்றனர். முதுகுளத்தூர் செல்லியம்மன் கோயில் நண்பர்கள் அணி இரண்டாவது பரிசு பெற்றது. மூன்றாவது பரிசு திருப்பாலைக்குடி அணிக்கும், நான்காவது பரிசு கிடாத்திருக்கை அணியினருக்கும் வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஊர் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: ஆக.23 பள்ளிகள் திறப்பு- கர்நாடகாவின் பஞ்ச வழிகாட்டுதல்கள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details