ராமநாதபுரம்:இலங்கை முல்லை மாவட்டம் முள்ளிவலை பகுதியைச் சேர்ந்த சிவனேசன். இவரது, மகள் கஸ்தூரி 2018ஆம் ஆண்டு இந்தியா வந்தார். பின்னர், சென்னையிலுள்ள வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், இலங்கைக்கு செல்வதற்காக சட்டவிரோதமாக சென்னையிலிருந்து தனுஷ்கோடி பகுதிக்குச் சென்று அங்கிருந்து கள்ளத்தோணியில் மூன்றாம் தீடைப்பகுதிக்குச் சென்றார்.
அப்பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மூன்றாம் தீடைப்பகுதியில் ஒரு பெண் தனியாக இருப்பதாக கடலோர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.