தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை கடற்படை அட்டூழியம் - படகுகள் விரட்டியடிப்பு - Srilankan navy pelted stones

கற்களைக் கொண்டு இலங்கை கடற்படை தாக்கியதில் இரண்டு படகுகளின் கண்ணாடி சேதமடைந்தது. நல்வாய்ப்பாக மீனவர்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பினர்.

படகுகள் விரட்டியடிப்பு
படகுகள் விரட்டியடிப்பு

By

Published : Sep 23, 2021, 12:24 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு, நெடுந்தீவு, தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகை நோக்கி கற்களைக் கொண்டு தாக்கியதில் இரண்டு படகுகளின் கண்ணாடி முழுவதும் சேதம் அடைந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள்

மேலும் பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளை விரட்டியடித்தும், வலைகளை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் நல்வாய்ப்பாக மீனவர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: அதிர்ச்சி: 37 மருந்துகள் தரமற்றவையாக அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details