தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்!

ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், அவர்களது மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.

srilankan navy attacked rameshwaram fishermen  rameshwaram fishermen  srilankan navy  ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்  ராமேஸ்வரம் மீனவர்கள்  இலங்கை கடற்படையினர்  ராமநாதபுரம் செய்திகள்  ramanathapuram news  ramanathapuram latest news  ராமநாதபுரம் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள்

By

Published : Jul 18, 2021, 2:50 PM IST

ராமநாதபுரம்:தொடர் டீசல் விலை உயர்வு மற்றும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை இல்லாததால் நேற்று (ஜூலை 17) ராமநாதபுரம் மாவட்ட இராமேஸ்வரம் மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 300-க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் ராட்சத விளக்குகளைக் கொண்டு அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலைகளை வெட்டி சேதப்படுத்தியதால், மீனவர்கள் மீன் பிடிக்காமல் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் டெல்லி பயணம்!

ABOUT THE AUTHOR

...view details