தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர்களின் ஜாமீனுக்கு ரூ.1 கோடி கேட்கும் இலங்கை: அதிர்ச்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள் - மீனவர்களின் ஜாமினுக்கு 1 கோடி ரூபாய் கேட்கும் இலங்கை நீதிமன்றம்

தமிழ்நாடு மீனவர்களை பிணையில் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் 1 கோடி ரூபாயை உத்தரவாத தொகையாக கேட்டுள்ளது, மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களின் ஜாமினுக்கு ரூ.1 கோடி கேட்கும் இலங்கை நீதிமன்றம் : அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
மீனவர்களின் ஜாமினுக்கு ரூ.1 கோடி கேட்கும் இலங்கை நீதிமன்றம் : அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

By

Published : Apr 10, 2022, 6:30 AM IST

ராமநாதபுரம்:ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மார்ச் 23-ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அனைவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

ஜாமினுக்கு ரூ.1 கோடி: அதனைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரும் நேற்று முன்தினம் (ஏப். 8) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, மீனவர்கள் 12 பேரும் ஜாமினில் செல்ல விருப்பப்பட்டால் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ.1 கோடி நீதிமன்றத்தில் உத்தரவாதத் தொகையாகக் கட்ட வேண்டும் எனவும், பணம் கட்ட தவறினால் வருகின்ற மே 12ஆம் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார்.

இதேபோல், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த 4 மீனவர்களுக்கும் வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மீனவர்களை பிணையில் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் தலா ரூ.1 கோடி உத்தரவாத தொகை கேட்டுள்ளது தமிழ்நாடு மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'என்ட பேரு ஸ்டாலின்..!': மலையாளத்தில் 'சம்சாரிச்ச' முதலமைச்சர்; விசில் அடித்து உற்சாகப்படுத்திய 'சகாவுக்கள்'

ABOUT THE AUTHOR

...view details