இலங்கையில் நிலவிய அசாதாரண சூழலால் அங்கிருக்கும் தமிழ் மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வருகைதந்தனர். குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியில் அதிகளவிலான இலங்கை தமிழ் மக்கள் அகதிகளாகஇருக்கின்றனர்.
இந்திய குடியுரிமை வேண்டும்: இலங்கை அகதிகள் வேண்டுகோள் - ராமேஸ்வரம்
ராமநாதபுரம்: மண்டபம் அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
இலங்கை அகதிகள் கோப்புப் படம்
பல வருடங்களாக இந்தியாவில் இருப்பதால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மண்டபம் பகுதி அகதிகள் முகாமில் 20 வருடங்களுக்கும் மேலாக இருப்பவர்கள், ”இலங்கை தமிழர்களுக்கான பிரச்னை என்பது மறுவாழ்வு சார்ந்தும், பாதுகாப்பு சார்ந்தும் இருப்பதால் இந்தியாவில் தங்களுக்கு அகதிகள் என்ற அடையாளம் வேண்டாம். தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.