ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட இயந்திரம் பொறுத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (மே 3) மாலை மீன்பிடிக்கச் சென்றனர்.
மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: நிபந்தனைகளுடன் விடுதலை! - நிபந்தனைகளுடன் விடுதலை
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 89 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

Sri Lankan Navy officers arrests 89 fishermen
மீனவர்கள் இன்று (மே 4) கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 11 நாட்டுப்படகுகளை சிறைபிடித்து அதிலிருந்த 86 மீனவர்களை கைது செய்தனர்.
இந்தியாவில், தற்போது கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்ற நிபந்தனைகளின்ன் அடிப்படையில் 86 மீனவர்களும் தங்களின் நாட்டுப் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.