ராமநாதபுரம்: ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அதேபோல் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்தனர். தற்போது 16 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.