ராமநாதபுரம்:கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்களுக்கு கரோனா பரிசோதனைக்கு பிறகு, இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் விசாரணை செய்து வந்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்களை 25ஆம் தேதி வரை தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு! - இந்திய மீனவர்கள் பிரச்சனை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை வரும் 25 ஆம் தேதிவரை தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![ராமேஸ்வரம் மீனவர்களை 25ஆம் தேதி வரை தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு! Rameswaram fishermen isolation till 25th](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10204183-174-10204183-1610375486063.jpg)
Rameswaram fishermen isolation till 25th
இந்த நிலையில், மீனவர்களை காணொலி மூலம், ஊர் காவல்துறை நீதிமன்ற நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை வரும் 25ஆம் தேதிவரை தனிமைப்படுத்தி வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு தனிநேரம் ஒதுக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்