தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவால் சோகமயமான தமிழ்நாடு மீனவர்கள் - விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மீனவர்களின் பல லட்சம் மதிப்பிலான ஒன்பது மீன்பிடி விசைப்படகுகளை அழிக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jul 13, 2021, 7:15 PM IST

Updated : Jul 13, 2021, 8:30 PM IST

ராமநாதபுரம்: தமிழ்நாடு கடலோர மாவட்டங்களிலிருந்து எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களைக் கைதுசெய்வதுடன் அவர்களது படகை அரசுடைமை ஆக்கும் சட்டத்தை இலங்கை அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.

இதற்கு தமிழ்நாடு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் இலங்கை கடல் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக இலங்கை அரசால் தற்போதும் தடுத்துவைக்கப்பட்டுள்ள 18 மீன்பிடி விசைப்படகுகளில் ஒன்பது படகுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

விசைப்படகுகளை அழிக்க உத்தரவு

எஞ்சிய பழுதடைந்த நிலையில் உள்ள ஒன்பது படகுகளை அழிப்பதற்கு அந்நாட்டு கடற்படையினரால் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்ற நீதிபதி படகுகளை அழிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில, ஒன்றிய அரசுகள் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி- ரகுபதி

Last Updated : Jul 13, 2021, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details