தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது - மீனவர்களைக் கைது செய்த இலங்கை ராணுவம்

திருவாடானையைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 6 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 6 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கைது

By

Published : Feb 20, 2022, 8:37 PM IST

ராமநாதபுரம்: திருவாடானையைச் சேர்ந்த மீனவர்கள், குமரேசன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 18) கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர்.

அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி முத்துக்குமார், பாலு, ரங்கதுரை, கம்மாகரையான், பூபதி, மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்த கடற்படையினர், படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து மீனவர்களையும், படகையும் மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details