ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சிலர் சட்டவிரோதமாக செல்ல இருப்பதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டபம் தென் கடற்கரை பூங்கா பகுதியில் சோதனை நடத்தியதில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த நிஷாமுதீன் என்பவர் எவ்வித ஆவணங்களும் இன்றி சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது.
இலங்கைக்கு தப்ப முயன்ற தமிழர் - க்யூ பிரிவு காவல்துறை விசாரணை - தப்பியோட முயற்சி
ராமநாதபுரம்: சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழரையும், அவருக்கு உதவிய நபரையும் கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
Sri Lanka Tamilian arrested for trying to flee to Sri Lanka
பின்னர் நிஜாமுதீனையும் அவரை ராஜபாளையத்திலிருந்து மண்டபம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த மதுரையைச் சேர்ந்த கெளரிசங்கர் (25), என்பவரையும் கைது செய்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.