இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்மையில், கொழும்பில் அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நாள்தோறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால் அங்கு உள்நாட்டுக் குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரம் தீவில் (தனுஷ்கோடிக்கு) அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இன்று (மார்ச்.22) வருகை தந்துள்ளனர்.