கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்குப் பருவ மழை தமிழகத்துக்கு நீரை அளிக்கவில்லை என்பதால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டது. பல கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றியதால் மக்கள் பல கி.மீ தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை உருவாகியுள்ளது.
மழை வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் சிறப்பு யாகம்! - ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில்
ராமநாதபுரம்: மழை வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
இந்நிலையில் கடும் வறட்சியைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் இந்து சமய அறநிலையத் துறை கீழ் செயல்பட்டு வரும் முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள சேது மாதவ கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க வருண ஜெப, வேள்வி யாகம் நடத்தப்பட்டு பின் புண்ணிய தீர்த்ததை சேது மாதவ தீர்த்த கிணற்றில் ஊற்றி ராமநாதசுவாமிக்கும் பர்வதவர்தனி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலும் அந்த புனித நீர் நந்தி பகவானுக்கு ஊற்றப்பட்டது. இந்த பூஜையின் போது சிவாச்சாரியார்கள் திருக்கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.