தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அப்துல் கலாம் ஐந்தாவது நினைவு தினம் - குடும்பத்தினர் சிறப்பு துவா!

ராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் சிறப்பு துவா செய்தனர்.

District collector veera raghava rao pays respect
அப்துல் கலாம் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அஞ்சலி

By

Published : Jul 27, 2020, 6:52 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவரும், இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று அழைக்கப்பட்டவருமான ஏ.பி.ஜே அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஜூலை 27) அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பேய்க்கரும்பிலுள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பு துவா நடத்தி அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் கலாம் நினைவிடத்தில் சிறப்பு துவா

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், சார் ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோரும் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இன்றைய தினம் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ஆட்சியர் வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்ந்து வருகிறார். 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு தற்போதுவரை 95 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். கலாம் காட்டிய வழியை இளைஞர்கள் பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறலாம்' என்றார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பேட்டி

பின்னர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் தலைவரும், கலாமின் பேரனுமான ஷேக் சலீம் கூறியதாவது:'ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நேரடியாக பேய்க்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, குடும்பத்தினர் 20 பேர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று, சமூக இடைவெளியுடன் சிறப்பு துவா செய்துள்ளனர்.

இங்கு வர இயலாத அனைவரும், வீட்டில் அப்துல் கலாம் பற்றிய சிந்தனைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்' என்று கூறினார்.

அப்துல் கலாமின் பேரனும், ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் தலைவருமான ஷேக் சலீம் பேட்டி

ஏ.பி.ஜே அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் பிறந்தார். அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை துறையில் சிறந்து விளங்கிய கலாம் 2002 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். இதைத்தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும் பேராசிரியர் பணியை மேற்கொண்டிருந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஷில்லாங்கில் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, கலாமின் உயிர் பிரிந்தது. இதன் பின்னர் அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு பகுதியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை நினைவு மண்டபமாக மாற்றியது.

ஆண்டுதோறும் ஜூலை 27ஆம் தேதி அப்துல்கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கலாம் மறைந்து ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது குடும்பத்தினர் சிறப்பு துவா நடத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அப்துல் கலாம் நினைவு நாளில் ஆன்லைனில் அஞ்சலி செலுத்தும் கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details