உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவிருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பூமிபூஜையைத் தொடங்கிவைக்கிறார். இந்நிலையில், இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
அயோத்திக்குச் செல்லும் ராமேஸ்வரம் கடற்கரை மணல்!
ராமநாதபுரம்: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையிலிருந்து மணல் எடுத்து சிறப்புப் பூஜைகள் செய்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு ராமேஸ்வரம் கடற்கரை மணல் எடுத்து சிறப்பு பூஜை
பின்னர் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடி கடலிலிருந்து கைப்பிடி மணல் எடுத்து, அதைச் சங்கரமடத்திலுள்ள அனுமன் சன்னதியில் வைத்து வேத விற்பனர்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அந்த மணலை காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள் தந்தருளிய தங்க ராமர் பாதுகைக்குள் வைத்து பூஜித்து அயோத்திக்கு அனுப்பிவைத்தனர்.