மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்திய கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர்வதற்கான பயிற்சி வழங்கும் திட்டம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் ஆண்டுதோறும் மீனவ கிராமத்தில் விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களின் குழந்தைகள் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையில் சேர விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மீன்வள துறை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படட்டுவருகின்றன. இங்கு விண்ணப்பித்தவர்களுக்கு ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் பயிற்சிகள் இன்று தொடங்கப்பட்டன. இப்பயிற்சியின் அடுத்த கட்டமாக சென்னையில் உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்பட்டு மூன்று மாத பயிற்சி வழங்கப்படும்.