ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் இருந்த போது சரக்கு வாகனத்தில், 50 கிலோ வீதம் 120 மூட்டைகளில் ஆறு டன் ரேஷன் அரிசியை மதுரைக்கு கடத்திச் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர்.
அதன்பின்னர், கடத்தி வந்த வாகனங்கள், அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உணவு தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மதுரையை சேர்ந்தமுருகன், ராமமூர்த்தி, திருவாரூரை சேர்ந்த வினோத், வினோத்குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யபட்டனர்.