தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்கு வங்கத்திலிருந்து ராமநாதபுரம் வந்த ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி! - ராமநாதபுரத்தில் கரோனா எண்ணிக்கை உயர்வு

ராமநாதபுரம்: மேற்கு வங்கத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ராமநாதபுரத்தில் மேலும்  ஆறு பேருக்கு கரோனா
ராமநாதபுரத்தில் மேலும் ஆறு பேருக்கு கரோனா

By

Published : May 18, 2020, 12:26 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் கீழக்கரையைச் சேர்ந்த மூதாட்டி(70) ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ளவர்களில் 21 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றனர். மேலும் 9 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் பரமக்குடி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த இரண்டு நாள்களுக்கு மேலாக ராமநாதபுரத்தில் கரோனா தொற்று இல்லாத நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து ராமநாதபுரத்திற்கு வந்த தொழிலாளர்கள் 6 பேருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அந்த 6 பேரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோன பாதித்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஏற்றுமதி செய்யப்படாததால் வேருடன் பிடுங்கி எறியப்படும் 'பஜ்ஜி' மிளகாய்ச் செடி!

ABOUT THE AUTHOR

...view details