தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் வைத்து சீட் விளையாடிய 6 பேர் கைது! - பணம் வைத்து சீட் விளையாடியவர்கள் கைது

ராமநாதபுரம் அருகே பணம் வைத்து சீட் விளையாடிய 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூ. 72 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

gambling
gambling

By

Published : Feb 6, 2021, 10:40 PM IST

தமிழ்நாட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது அரசால் தடை செய்ய பட்டுள்ளது. இது போன்று சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் கீழக்கரை, காஞ்சிரங்குடி பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவலர்கள் கரிசல்குளத்தை சேர்ந்த சக்திவேல், தொண்டியை சேர்ந்த சதாம் உசேன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஆர்.எஸ்மங்கலத்தைச் சேர்ந்த பிலால் கனி, கீழக்கரையை சேர்ந்த இஸ்மாயில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கவியரசன் ஆகிய 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.72 ஆயிரத்து 120யை பறிமுதல் செய்தனர். பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'எந்திரன்' கதை வழக்கு: இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை

ABOUT THE AUTHOR

...view details