தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மீனவர்களின் 6 விசைப்படகுகளை நாட்டுடமையாக்கிய இலங்கை!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்களுக்குச் சொந்தமான ஆறு விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் நாட்டுடமையாக்கியுள்ளது.

By

Published : Aug 10, 2019, 10:14 AM IST

ராமநாதபுரம்

ராமேஸ்வரம், புதுக்கோட்டையிலிருந்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஜோஸ்வா, முருகேசன், மூர்த்தி, கந்தசாமி, அமுதன் உள்ளிட்ட மீனவர்கள் அனைவரும் படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

பின்னர் இவர்கள் மீது மீன்பிடிக்க அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, ஐந்து மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது.

இருப்பினும், சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து மீனவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு திருப்பியனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர், இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்.

படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமெனவும் இல்லையென்றால் படகுகள் நாட்டுடமையாக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், நேற்று தமிழ்நாடு விசைப்படகு உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஆறு விசைப்படகுகளையும் நாட்டுடமையாக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த ஆறு படகுகளும் நாட்டுடமையாக்கும் பணிகளில் அலுலவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details