தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஞ்சள் கடத்திய ஆறு மீனவர்கள் கைது

இலங்கைக்கு மஞ்சள் கடத்திய, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினர்
இலங்கை கடற்படையினர்

By

Published : Sep 19, 2021, 8:15 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளிலிருந்து சமையல் மஞ்சள், புகையிலை உள்ளிட்டப் பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று (செப்.18) இலங்கை கடற்படையினர், கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த படகை பரிசோதனை செய்ததில், 60ஆவது சாக்கில் 2,100 கிலோ மஞ்சள் கடத்தி வந்தது தெரியவந்தது.

ராமநாதபுரம்

இதனைத் தொடர்ந்து படகில் இருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை கல்பட்டி கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரகுமான், அபு கனி, மோகன்தாஸ், வேலவன் உட்பட 6 பேர் என்பது தெரியவந்தது.

இலங்கை கடற்படையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கடத்தல் சம்பவங்களைத் தடுக்க இரண்டு கடற்படை, கடலோர காவல் படை மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிசிடிவி இருந்தா என்ன - அலேக்காக பைக்கை திருடும் பலே கொள்ளையர்.

ABOUT THE AUTHOR

...view details